இளையோர் மாதிரி நாடாளுமன்ற நிகழ்ச்சி
By DIN | Published On : 29th July 2019 08:37 AM | Last Updated : 29th July 2019 08:37 AM | அ+அ அ- |

ஓமலூரில் வட்டார அளவிலான இளையோர் மாதிரி நாடாளுமன்ற நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு நேரு யுவகேந்திர மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் சார்லஸ் தலைமை வகித்தார். ம. ஜெகன் வரவேற்றார். ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ப. முருகன், ஆணையாளர் இரா. விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர். சமூக ஆர்வலர்கள் என். வெங்கடேசன் தூய்மை பாரத இயக்கம் குறித்தும், மணி நீர்நிலை மேலாண்மை குறித்தும், பாரத பிரதமரின் கனவுத் திட்டம் பி. மதியழகன், இளைய இந்தியா குறித்தும் ஜி. விசாலாட்சி ஆகியோர் பேசினர். வி. பிரேமா நன்றி கூறினார்.