முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
இயற்கை உணவு விழிப்புணர்வு கருத்தரங்கு
By DIN | Published On : 30th July 2019 09:47 AM | Last Updated : 30th July 2019 09:47 AM | அ+அ அ- |

வாழப்பாடியில் ஜே.சி.ஐ. தன்னார்வ அமைப்பின் சார்பில், உணவே மருந்தாகும் இயற்கை உணவு மருத்துவம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடி ஜே.சி.ஐ., தன்னார்வ அமைப்பின் சார்பில், கிட்ஸ் பார்க் மழலையர் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை உணவே மருந்தாகும் இயற்கை மருத்துவம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. கூட்டத்துக்கு, வாழப்பாடி மெட்ரோ ஜே.சி.ஐ., சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் ரமேஷ்பாபு வரவேற்றார். அன்றாடம் உணவாக நாம் பயன்படுத்தும் பொருள்களைக் கொண்டு உணவே மருந்தாகும் விதத்தில் உணவு மருத்துவ முறைகள் குறித்து, இயற்கை மருத்துவர் நாமக்கல் ராணி கருத்துரை வழங்கினார். மழைநீரை சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு அச்சாரமிடும் வகையில், நீர்நிலைகளைத் தூர்வாரி புதுப்பித்து பாதுகாக்கும் திட்டத்தில் இணைந்த ஜே.சி.ஐ., நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், ரமேஷ் பாபு, விக்னேஷ் ஆகியோருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. கருத்தரங்குக்கான ஏற்பாடுகளை, ஜே.சி.ஐ சமூகத் திட்டத் தலைவர் இளையரசன், பாண்டியராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.