Enable Javscript for better performance
13 வயது சிறுமியை  பலாத்காரம் செய்த இளைஞர் போக்ஸோ சட்டத்தில் கைது- Dinamani

சுடச்சுட

    

    13 வயது சிறுமியை  பலாத்காரம் செய்த இளைஞர் போக்ஸோ சட்டத்தில் கைது

    By DIN  |   Published on : 01st June 2019 10:27 AM  |   அ+அ அ-   |    |  

    சேலத்தில் 13 வயது சிறுமியைப்  பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸார்  வெள்ளிக்கிழமை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர். 
    சேலம் கருப்பூர் வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த 13 வயது சிறுமியுடன் பெற்றோர் வியாழக்கிழமை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்து புகார் மனு ஒன்று அளித்தார். அதில்
    கூறியிருப்பதாவது:
    எங்களது மகள் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் அருகே எங்களது மகள் வந்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த நவீன் (25) மகளை இருசக்கர வாகனத்தில் கடத்தி காட்டுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அவரது நண்பர்களையும் வரவழைத்துள்ளார். அந்த நேரத்தில் எங்களது மகள் மயங்கிவிட்டதால், அதன் பிறகு நடந்தது ஏதும் தெரியவில்லை. இது தொடர்பாக வெளியே சொன்னால், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.எனவே அந்த இளைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். 
    இந்தப் புகார் குறித்து விசாரணை செய்ய சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸாருக்கு மாநகர காவல் ஆணையர் கே.சங்கர் உத்தரவிட்டார். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட  ஆய்வாளர் வளர்மதி, 13 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து, கொலை மிரட்டல் விடுத்த நவீன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து வெள்ளிக்கிழமை கைது செய்தார்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp