படைப்புழுவைக் கட்டுப்படுத்த ஊடு பயிரை பயிரிடலாம்

மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த விவசாயிகள் ஊடுபயிர்களை பயிரிட்டு கட்டுப்படுத்தலாம் என வேளாண்மை அலுவலர் பொ. வேல்முருகன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த விவசாயிகள் ஊடுபயிர்களை பயிரிட்டு கட்டுப்படுத்தலாம் என வேளாண்மை அலுவலர் பொ. வேல்முருகன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர், தலைவாசல் மற்றும் வாழப்பாடி பகுதிகளில் கடும் வறட்சியால் மக்காச்சோள பயிரை விவசாயிகள் பயிரிட்டு வந்துள்ளனர். ஆனால், அதில் படைப்புழு தாக்குதல் அதிகமாகி விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். இது குறித்து ஆத்தூர் வேளாண் அலுவலர் பொ. வேல்முருகன் தெரிவித்ததாவது: விவசாயிகள் படைப்புழுத் தாக்குதலை கட்டுப்படுத்த மக்காச்சோள பயிரில் ஊடுபயிராக உளுந்து, தட்டப்பயிறு ஆகியவற்றை பயிரிட்டால் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்  எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com