சுடச்சுட

  

  ஆத்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
  ஆத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட உரிமையியில் நீதிமன்றம், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், முன்சீப் நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் 1 மற்றும் 2, விரைவு நீதி மன்றம் என ஆறு நீதி மன்றங்கள் இயங்கி வருகின்றன. நீதிமன்ற வளாகம் அருகே நடுவர் மற்றும் நீதிபதிகளுக்கு என மூன்று குடியிருப்புகள் மட்டுமே உள்ளன. மேலும், வழக்குரைஞர்கள் சங்கம், வாகன நிறுத்தம் என போதுமான இடவசதி இல்லாமல் உள்ளது.
  இதனையடுத்து, நீதிமன்ற வளாகம் அருகே ஓடை புறம்போக்கு இடம் இருப்பதாகவும் அதனை நீதிமன்றங்களுக்கு கூடுதலாக இடம் ஒதுக்கி தருமாறும் வழக்குரைஞர்கள் சங்கத்தினர் உயர் நீதிமன்ற நீதிபதியிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், புதன்கிழமை மாலை சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் நீதிமன்ற வளாகத்தை ஆய்வு மேற்கொண்டார்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai