சுடச்சுட

  

  சங்ககிரி வட்டத்துக்குள்பட்ட 10 கிராமங்களின் ஜமாபந்தி சங்ககிரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில்  புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஜமாபந்தி அலுவலரிடம் பொதுமக்கள் முதியோர் ஓய்வூதியத் தொகை, வீட்டுமனைப் பட்டா,  குடும்ப அட்டை  உள்ளிட்டவை குறித்து 209 மனுக்களை அளித்தனர். 
  கத்தேரி, ஆலத்தூர் வீராச்சிபாளையம், வீராச்சிபாளையம் அக்ரஹாரம், வீராச்சிபாளையம் அமானி, சின்னாகவுண்டனூர், சங்ககிரி, சன்னியாசிப்பட்டி அக்ரஹாரம், மோரூர் பிட்-1, மோரூர் பிட்-2, கஸ்தூரிபட்டி உள்ளிட்ட கிராமங்களின் கணக்குகளை ஜமாபந்தி அலுவலரும், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியருமான மு.அமிர்தலிங்கம் தணிக்கை செய்தார்.
  பின்னர், அவரிடம் பட்டா மாறுதல் கோரி, சர்வே எண் உள்பிரிவு,  வீட்டு மனைப் பட்டா, நில அளவை  செய்தல், வாரிசு சான்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை குறித்து 209 மனுக்களை அளித்தனர்.  ஜமாபந்திக்கு முன்னதாக வருவாய் கோட்டாட்சியர் ஜமாபந்தி கிராமங்களில் நில அளவீடு செய்ய பயன்படுத்தப்படும் கட்டைகள்,  சங்கிலிகளை ஆய்வு செய்தார். ஆய்வு செய்த பின்னர் அவர் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சங்கிலிகளை  எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும், அதனை பராமரிக்கும் வழிமுறைகள் குறித்தும் விளக்கிக் கூறினார். 
  வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வகுமார், வட்டாட்சியர் கே.அருள்குமார், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஜெயக்குமார், மண்டல துணை வட்டாட்சியர் மாணிக்கம், தேர்தல் துணை வட்டாட்சியர் சிவராஜ், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கணக்கு தணிக்கையின்போது உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai