சுடச்சுட

  

  சங்ககிரி வட்டம், கஸ்தூரிபட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மஹா கணபதி, ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
  கும்பாபிஷேகத்தையொட்டி, கோயில் வளாகத்தில் ஜூன் 13 வியாழக்கிழமை கணபதி, லட்சுமி பூஜைகளோடு முதல்கட்ட யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. அன்றைய தினம் காவிரியிலிருந்து புனித தீர்த்தம் எடுத்து வருதலும், கோபுரத்தில் கலசங்கள் நிறுவதலும் நடைபெற உள்ளன. அதனையடுத்து, ஜூன் 14 வெள்ளிக்கிழமை 2-ஆம் கட்ட யாகசாலை வேள்வி பூஜைகளும், இதனையடுத்து கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai