காவல் துறை சார்பில் குறை தீர்ப்பு முகாம்

சேலம் மாநகர காவலர் சமுதாயக் கூடத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. 

சேலம் மாநகர காவலர் சமுதாயக் கூடத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. 
சேலம் மாநகர காவல் ஆணையர் கே.சங்கரை நேரில் சந்தித்து பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்கள் மாநகரில் உள்ள பல்வேறு காவல் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், திருப்தியடையாத மனுதாரர்கள் இம்முகாமில் கலந்துகொண்டனர்.
ஆண்டு தொடக்கத்தில் இருந்து கடந்த மாதம் இறுதிவரை 124 புகார் மனுக்கள் பொதுமக்களால் காவல் ஆணையர் கே.சங்கரிடம் கொடுக்கப்பட்டன. அவை சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு  அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மனுதாரர்கள் அனைவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணை திருப்தி அளிக்கிறதா என்று விசாரிக்கப்பட்டது. விசாரணையில் திருப்தி தெரிவிக்காத 48 மனுதாரர்கள் சிறப்பு முகாமுக்கு அழைக்கப்பட்டனர். இவர்களில் 18 பேர் முகாமில் கலந்துகொண்டனர். 
நிகழ்ச்சியை தொடக்கி வைத்து பேசிய காவல் ஆணையர் கே.சங்கர், பொதுமக்களின் அனைத்து புகார்கள் மீதும் தீர்வு காண்பதே காவல் துறையின் நோக்கமாகும். இதில் சிவில் சம்பந்தப்பட்ட மனுக்கள் மீது எவ்வாறு தீர்வு காண்பது என்பது குறித்து சட்ட ஆலோசனை வழங்கப்படுகிறது என்றார்.
நிகழ்ச்சியில், துணை ஆணையர்கள் தங்கதுரை, சியாமளாதேவி, உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் கலந்துகொண்டு பொதுமக்களின் புகார் மனுக்கள் தீர்வு காண முயற்சி மேற்கொண்டனர். காவல் ஆணையர் சட்ட ஆலோசகர் சுரேஷ் நிகழ்ச்சியில் பங்கேற்று, காவல் துறையினரால் தீர்வு காண முடியாத மனுக்களுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com