நாளை நெய்க்காரப்பட்டி கணபதி, காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சேலம் மாவட்டம், நெய்க்காரப்பட்டியில் அமைந்துள்ள சக்தி கணபதி, சக்தி காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

சேலம் மாவட்டம், நெய்க்காரப்பட்டியில் அமைந்துள்ள சக்தி கணபதி, சக்தி காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு, புதன்கிழமை உத்தமசோழபுரம் அம்மன் கோயிலில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனிதநீர் தீர்த்தக் குடங்கள், முளைப்பாரிகளுடன் பசுமாடு, குதிரை, வாண வெடிகள் மற்றும் மேள தாள வாத்தியங்கள் முழங்க நெய்க்காரப்பட்டி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்தனர்.
தீர்த்தக் குடம் எடுத்து வந்த பக்தர்கள் சக்தி கணபதி மற்றும் சக்தி காளியம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து கணபதி யாகத்துடன் கும்பாபிஷேக விழா
தொடங்கியது.
வியாழக்கிழமை காலை 8.30-க்கு சிறப்பு பூஜைகள் செய்து புதிய விக்கிரகங்களுக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 108 முலிகைகளை கொண்டு லலிதா சகஸ்ரநாம அர்ச்சனையுடன் சிறப்பு யாக பூஜை தொடங்கப்பட்டு, இரவு 8 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு சக்தி கணபதி கோயில் கும்பாபிஷேகமும், காலை 7 மணிக்கு சக்தி காளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையும் சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி நடத்தி வைப்பர். கும்பாபிஷேக விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com