ஆத்தூர், ஜூன் 13: அம்மம்பாளையம் ஜெய்வின்ஸ் அகாதெமி பள்ளியில் 11-ஆம் வகுப்புத் தொடக்க விழா பள்ளியின் தாளாளர் எஸ். இளவரசு தலைமையில் நடைபெற்றது.
கணபதி ஹோமத்துடன் துவங்கிய விழாவில் செயலாளர் இ. இளையராஜா, முதல்வர் கிறிஸ்டோபெல் ஜெர்மி, நிர்வாக அலுவலர் மணிகண்டன், பெற்றோர் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பெற்றோர் தங்களது குழந்தைகளை வாழ்த்தினர்.