ஆத்தூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
By DIN | Published On : 23rd June 2019 03:25 AM | Last Updated : 23rd June 2019 03:25 AM | அ+அ அ- |

பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆத்தூர் உழவர் சந்தையில் பொதுமக்களுக்கு நகராட்சி ஆணையர் ர. சரஸ்வதி சனிக்கிழமை துணிப்பை வழங்கினார்.
ஆத்தூர் இளைஞர்கள் குழுவினர் அவர்களது சொந்த முயற்சியால் 10 ஆயிரம் துணிப்பைகளை உற்பத்தி செய்து அதனை ஆத்தூர் நகராட்சி பொதுமக்களிடையே வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தனர்.
இத் துணிப்பைகளை நகராட்சி ஆணையாளர் ர.சரஸ்வதி உழவர் சந்தையில் வியாபாரிகளிடமும்,பொதுமக்களிடமும் வழங்கி பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் துப்புரவு அலுவலர் ந. திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர்கள், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், ஆத்தூர் இளைஞர் குழுவைச் சேர்ந்த மூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ஆனந்த், செல்வமணி மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.