கோனேரிப்பட்டி கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ. 7 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
By DIN | Published On : 24th June 2019 10:02 AM | Last Updated : 24th June 2019 10:02 AM | அ+அ அ- |

கோனேரிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நிகழாண்டுக்கான முதல் பருத்தி ஏலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 300 பருத்தி மூட்டைகள் ரூ. 7 லட்சத்துக்கு விற்பனையாகின.
இந்த ஏலத்தில் நெடுங்குளம், கல்வடங்கம், பொன்னம்பாளையம், காவேரிப்பட்டி, பூதப்பாடி, ஊமாரெட்டியூர், வெள்ளி திருப்பூர், கோனேரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் நாமக்கல், சேலம், திருப்பூர் மாவட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
கொள்முதல் செய்யப்பட்ட 300 மூட்டைகள் 75 குழுவாகப் பிரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டன. இதில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ. 5,300-ம் அதிகபட்ச விலையாக ரூ. 5,700 வரையுமாக மொத்தம் ரூ. 7 லட்சத்துக்கு விற்பனையாகின.
பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கோனேரிப்பட்டி கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நடை
பெறும் ஏலத்தில் பங்கேற்று பயனடையுமாறும். மேலும் அடுத்த ஏலம் கோனேரிப்பட்டி பருத்தி ஏல மையத்தில் ஜூன் 30-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என கூட்டுறவு கடன் சங்க அலுவலர்கள் தெரிவித்தனர்.