சுடச்சுட

  

  கொத்தாம்பாடியில் பாமக மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் கண்ணன் நாயுடு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
  மாவட்ட வன்னியர் சங்கச் செயலர் ஆர்.வி.பச்சமுத்து, மாவட்ட துணைத் தலைவர் செல்வம், மாவட்டப் பொருளாளர் மேனகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் எம்.பி.நடராஜன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணை பொதுச்செயலர் பி.என்.குணசேகரன், மாநில துணை அமைப்பு செயலர் எம்.நாராயணன், மாவட்ட சிறப்பு செயலர் முத்து, ஏ.கே.பொன்னுசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
  கூட்டத்தில், மேட்டூர் உபரி நீர் சேலம் மாவட்டம் முழுவதும் பயன்படும் வகையில் குடிநீர், விவசாயம் உள்ளிட்ட பயன் தரும் செயல்திட்டங்களை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற தமிழக அரசு வழிவகை செய்திட வேண்டும். கொத்தாம்பாடி தேசிய புறவழிச்சாலையில் அடிக்கடி விபத்துகள் நிகழ்வதை தடுக்க வேகத்தடுப்புகள் நிரந்தரமாக வைக்க வேண்டும். கோதாவரி நதிநீரை தமிழகத்துக்கு கொண்டு வரும் திட்டத்துக்கு ரூ.60 ஆயிரம் கோடி அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இள.செழியன் நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai