சுடச்சுட

  

  தமிழகத்தில் கடும் வறட்சி நீங்கி மழை பொழிய வேண்டி மேச்சேரி ஒன்றிய அதிமுக சார்பில் மேச்சேரி பத்ரகாளியம்மன் ஆலயத்தில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
  மேட்டூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.செம்மலை சிறப்பு பூஜைகளை தொடக்கி வைத்தார். மழை வேண்டி வருணயாகம் நடத்தப்பட்டது. சுமார் இரண்டு மணிநேரம் நடைபெற்ற யாக பூஜையில் மேச்சேரி ஒன்றிய அதிமுக செயலர் சதாசிவம், பேரூர் செயலர் மாணிக்கம், முன்னாள் மேச்சேரி பேரூராட்சி தலைவர் ஜே.குமார், முன்னாள் மேச்சேரி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சந்திரசேகரன், அண்ணாமலை, செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai