சுடச்சுட

  

  கொங்கணாபுரம் ஒன்றியப் பகுதியில் அனுமதி இன்றி பிரதான குடிநீர் குழாயிலிருந்து குடிநீர் எடுத்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
  எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் ஒன்றியப் பகுதி கிராமங்களுக்கு எடப்பாடி-ராசிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொங்கணாபுரம் ஒன்றியப் பகுதியில் உள்ள பிரதான குடிநீர் குழாயிலிருந்து சிலர் அனுமதி இன்றி மின்மோட்டர்களை வைத்து நீரை உறிஞ்சி எடுப்பதாகவும், அவ்வாறு அதிகளவில் உறிஞ்சப்படும் குடிநீர் செங்கல் சூளைகள் மற்றும் விசைத்தறிக் கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வருவதாகவும் புகார் எழுந்தது.
  இதையடுத்து, கொங்கணாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் பி.ஜெ.கண்ணன் தலைமையிலான உள்ளாட்சி அலுவலர்கள், கொங்கணாபுரத்தை அடுத்த குரும்பப்பட்டி, கட்டிக்காடு, வெண்டனூர், வாழக்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அனுமதி இன்றி பிரதான குடிநீர் குழாயிலிருந்து மின் மோட்டார் வைத்து குடிநீரை எடுத்த நபர்கள் கண்டறிப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், அவர்கள் குடிநீர் எடுக்க பயன்படுத்தி மின் மோட்டார்களை உள்ளாட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். ஆய்வில், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய செயலர் ராஜா, சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
  தம்மம்பட்டியில்...
  தம்மம்பட்டி பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் இணைப்புகளில் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளனவா என பேரூராட்சி ஊழியர்கள் சோதனை செய்து
  வருகின்றனர்.
  தம்மம்பட்டி பேரூராட்சி பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. மக்கள் குடிநீருக்காக நெடுந்தொலைவு சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். 
  வீட்டுக் குடிநீர் இணைப்புகளில் சில நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் விடப்படுகிறது. இந்நிலையில், அனைத்து வார்டு மக்களுக்கும் குடிநீர் சென்று சேரவில்லை என புகார் எழுந்துள்ளது.
  இதையடுத்து, தம்மம்பட்டி பேரூராட்சியில் இருக்கும் 18 வார்டுகளிலும் வார்டுவாரியாக பேரூராட்சி ஊழியர்கள் வீடுவீடாகச் சென்று குடிநீர் இணைப்புகளை ஆய்வு செய்து
  வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai