சுடச்சுட

  

  மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 282 கன அடியாக அதிகரித்துள்ளது.
  காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக மழை பெய்து வருகிறது.  மழையின் அளவைப் பொருத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.  திங்கள்கிழமை காலை நொடிக்கு 271 கன அடி வீதம் வந்துகொண்டிருந்த நீர்வரத்து, செவ்வாய்க்கிழமை காலை நொடிக்கு 282 கன அடியாக அதிகரித்துள்ளது.  அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்கு நொடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
   நீர் வரத்தைக் காட்டிலும் திறப்பு அதிகமாக இருப்பதால்,  திங்கள்கிழமை காலை 44.26 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், செவ்வாய்க்கிழமை காலை 44.13 அடியாகச் சரிந்தது.  அணையின் நீர் இருப்பு 14.31 டி.எம்.சி.யாக இருந்தது.  செவ்வாய்க்கிழமை காலை மேட்டூர் அணைப் பகுதியில் 16.60 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai