ஆத்தூர் பொதுமக்களுக்கு ஆணையர் முக்கிய அறிவிப்பு

ஆத்தூர் நகராட்சி பொதுமக்களுக்கு நகராட்சி ஆணையர் ஆர்.சரஸ்வதி முக்கிய அறிவிப்பை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளார்.

ஆத்தூர் நகராட்சி பொதுமக்களுக்கு நகராட்சி ஆணையர் ஆர்.சரஸ்வதி முக்கிய அறிவிப்பை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளார்.
குடிநீர் பற்றாக்குறையாக இருப்பதால் தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில், தினமும் லாரிகள் மூலமாக நகராட்சி மக்களுக்கு குடிநீர் விநியோகிக்க முடிவு செய்து அப்பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஆத்தூர் நகராட்சிக்கு குடிநீர் வழங்கும் ஆத்தூர்-மேட்டூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கும் நீரேற்று குழாய் கொத்தாம்பாடி அருகே பழுது ஏற்பட்டுள்ளது. அதனை பழுது நீக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், ஆத்தூர் நகரில் லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க  உள்ளது.
இதையடுத்து, புதன்கிழமை (ஜூன் 26) காலை ஜோதிமில், மங்கம்மா, ராணிப்பேட்டை, சவரிமுத்து, சிவாஜி, மேற்கு மாதாகோயில், மேரி, அலெக்சாண்டர், சீதா கேசவன் ஆகிய தெருக்களிலும், மாலையில் காமராஜனார் சாலை, சாத்தனார், முருகன் ரைஸ்மில், ஆண்டாள், ஆரியா, இளங்கோ தெரு வடக்குப் பகுதி ஆகிய தெருக்களிலும் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என  ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், வியாழக்கிழமை (ஜூன் 27) காலை இராஜாஜி காலனி முக்கியச் சாலை, மேற்குப் பகுதி, புதுப்பேட்டை சத்திரம், இளங்கோ தெரு தெற்குப் பகுதி, கலைஞர் காலனி மேற்குப் பகுதி, சந்தனகிரி சாலை தெரு, கிணறு, தாகூர் தெருக்களிலும், மாலையில் ராஜாஜி காலனி கிழக்குப் பகுதி, நாராயணசாமி தெரு, கலைஞர் காலனி தெற்குப் பகுதி, அய்யாவு தெரு, உப்புஓடை வடக்கு மற்றும் தெற்குப் பகுதியிலும், வெள்ளிக்கிழமை (ஜூன் 28) காலை பெரியதம்பி தெரு, சத்தியசாய் நகர், பாரதியார் தெரு, நைனி தெரு, மாலையில் கோட்டை அம்மன் நகர், கலைஞர் காலனி தெற்குப் பகுதி, மணிமேகலை தெரு, நாராயணபுரம் ஆகிய பகுதிகளிலும், சனிக்கிழமை (ஜூன் 29) காலை கண்ணாடி மில் தெற்குப் பகுதி, அருணகிரிநாதர் தெரு கிழக்குப் பகுதி, மாலையில் அருணகிரிநாதர் தெரு வடக்குப் பகுதி, கண்ணாடி மில் வடக்குப் பகுதியிலும் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் ஆத்தூர் நகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் தொடர்பான புகார்களை தெரிவிக்க 04282-240773 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளாலம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com