இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் ஆய்வு

சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் ஏ.அண்ணாதுரை மற்றும் முதுநிலை வணிக மேலாளர் இ.ஹரிகிருஷ்ணன்

சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் ஏ.அண்ணாதுரை மற்றும் முதுநிலை வணிக மேலாளர் இ.ஹரிகிருஷ்ணன் ஆகியோர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
கோவையில் இருந்து சேலம் வந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், பயணிகளுக்கான வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
பயணிகளின் இருக்கை, ரயில் பெட்டிகளில் உள்ள எலக்ட்ரிக் சாதனங்களின் செயல்பாடு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் போது ரயில்களில் சுத்தம், கழிப்பறை முறையாகப் பராமரிக்கப்படுகிறதா என பயணிகளிடம் கேட்டறியப்பட்டது. மேலும், ரயிலில் உள்ள சமையல் செய்யும் இடத்தையும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர். இதில் உணவின் தரம், எடை ஆகியவை சரிபார்க்கப்பட்டன.
இதுதவிர, ஆய்வின் போது பயணிகளுக்கான மகளிர் உதவி மையம், கோச் மித்ராஸ் (ரயில் பெட்டிகளை சுத்தம் செய்வது) உள்ளிட்ட பல்வேறு உதவி மையங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 
மேலும், முன்பதிவில்லா பயணச்சீட்டுகளை எடுக்க செல்லிடப்பேசியில் செயலியை பதிவிறக்கம் செய்து, வரிசையில் நிற்பது போன்ற காலதாமதத்தை தவிர்ப்பது குறித்தும் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ரயில்களில் தொடர்ந்து பயணிகளுக்கான வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் ஏ.அண்ணாதுரை தெரிவித்தார்.
ஆய்வின் போது, முதுநிலை மின் பொறியாளர் அரவிந்தன், முதுநிலை இயந்திரவியல் பொறியாளர் முகுந்தன், பாதுகாப்பு பிரிவு அலுவலர் கோபி சந்தரா நாயக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com