ஜூன் 29-இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ்

சேலத்தில் வரும் ஜூன் 29-ஆம் தேதி தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்தார்.

சேலத்தில் வரும் ஜூன் 29-ஆம் தேதி தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில்  டிடியு-ஜிகேஒய் திட்டத்தின் கீழ் 2018-2019-ஆம் ஆண்டுக்காக, இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில்  தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாம் வரும் ஜூன் 29-ஆம் தேதி காலை 10 மணியளவில்  கோட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு மற்றும் தொழில்நுட்பக் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்கள் (ஆண்/பெண் இருபாலர்) கலந்து கொள்ளலாம்.
 இதில் இளைஞர்கள் மற்றும் மகளிர் தங்களுடைய கல்விச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை நகலுடன் கலந்துகொண்டு தங்களுக்கேற்ற வேலைவாய்ப்பினை தேர்வு செய்து கொள்ளலாம். 
இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள், தங்களுக்குத் தேவையான நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். எனவே, வேலைவாய்ப்பு பெற விரும்புவோர் (ஆண்/பெண்) தவறாது  இதில் கலந்துகொண்டு பயனடையலாம்.
மேலும், விவரங்களுக்கு திட்ட அலுவலர், மகளிர் திட்டம், அறை எண் 207, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சேலம் என்ற முகவரியில் செயல்படும் மகளிர் திட்ட அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com