ஏற்காடு வணிகர்கள் நல சங்க சிறப்பு ஆலோசனை கூட்டம்
By DIN | Published On : 02nd March 2019 08:32 AM | Last Updated : 02nd March 2019 08:32 AM | அ+அ அ- |

ஏற்காடு வணிகர்கள் நலச் சங்க சிறப்பு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் கௌரவத் தலைவர் ஆர்.தேவதாஸ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் எஸ்.கே பெரியசாமி , மாவட்ட செயலாளர் எஸ்.வர்கீஸ் , மாவட்ட பொருளாளர் எம்.சந்திரதாசன் முன்னிலை வகித்தனர்.
மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாநில , மாவட்ட மூத்த நிர்வாகிகள் கெளரவிக்கப்பட்டனர். தமிழ்நாடு வணிகர் சங்கம் சென்னையில் சொந்தக் கட்டடம் கட்ட ஏற்காடு வணிகர்கள் சங்கம் சார்பில் ரூ. 50 ஆயிரம் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் ஏற்காடு வணிகர்கள் சங்க நிர்வாகிகள் ஜி. ரவிச்சந்திரன், ஆர்.ஜெயராமன், எல்.ஆர் பாலாஜி, வி.முருகேசன், டி.சரவணன்,பி.புருஷோத்தமன். பி.எஸ். ஆஷா,சி.கணேசன், ,ஜி. பாலகிருஷ்ணன்,எஸ்.சிஜீ. சதானந்தன் ,எம்.கே ஜவஹர்லால் நேரு மற்றும் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.