சின்ன திருப்பதி பெருமாள் கோயிலில் சுவாமி திருக்கல்யாணம்

சேலம் சின்ன திருப்பதியில் உள்ள வெங்கடேச பெருமாள் கோயிலில் 38-ஆம் ஆண்டாக வெங்கடேசப் பெருமாள் திருக்கல்யாண மஹோத்சவம் நடைபெற்றது.

சேலம் சின்ன திருப்பதியில் உள்ள வெங்கடேச பெருமாள் கோயிலில் 38-ஆம் ஆண்டாக வெங்கடேசப் பெருமாள் திருக்கல்யாண மஹோத்சவம் நடைபெற்றது.
கடந்த வாரம் வெங்கடேசப் பெருமாளின் கருட சேவை மற்றும் பல்வேறு வைபவங்கள் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக வெங்கடேசப் பெருமாள் திருக்கல்யாண வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீனிவாச பெருமாளுக்கும் அலர்மேலு மங்கை ஆண்டாள் தாயாருக்கும் பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன.
பின்னர் திருமண மேடைக்கு ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு சுதர்சன பட்டாச்சாரியார் தலைமையில் வேதங்கள் முழங்க மஹா ஹோமம் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக பெருமாளுக்கும் அலர்மேலு மங்கை ஆண்டாளுக்கும் கங்கண கயிறு கட்டப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.  பின்னர் திருமண ஆடை அணியப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் மாங்கல்யம் காண்பிக்கப்பட்டு ஸ்ரீ ஆண்டாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
மங்கள வாத்தியம் முழங்க ஸ்ரீ அலர்மேலு மங்கை ஆண்டாளை பட்டாச்சாரியார் நடனம் ஆடியபடி ஸ்ரீ வெங்கடேஷப் பெருமாள், ஸ்ரீஅலர்மேலு மங்கை ஆண்டாள் தம்பதி சமேதராய் அமர்த்தப்பட்டு நங்கவல்லி எனும் நலுங்கு பூஜை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சன்னிதியிலிருந்து ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர் மாலையை ஸ்ரீ வெங்கடேஷப் பெருமாளுக்கு சாத்துபடி நிகழ்ச்சியும் நடைபெற்றது. 
பின்னர் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளுக்கும், ஸ்ரீ அலர்மேலு மங்கை ஆண்டாளுக்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சேலம் மாநகரப் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com