சிவாலயங்களில் பிரதோஷம்
By DIN | Published On : 04th March 2019 08:42 AM | Last Updated : 04th March 2019 08:42 AM | அ+அ அ- |

தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதிகளில் சிவாலயங்களில் பிரதோஷ விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
தம்மம்பட்டி ஸ்ரீ காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோயிலில் பிரதோஷ விழா நடைபெற்றது.
இதில் நந்தீஸ்வரருக்கு பால், தயிர், இளநீர், தேன், குங்குமம், சந்தனம், பச்சரிசி மாவு, மஞ்சள் தூள், திருமஞ்சனம், நல்லெண்ணை, எலுமிச்சைச் சாறு ஆகிய பொருள்கள் மூலம் அபிஷேகம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து நந்தீக்கு வெள்ளிக் கவசம் அணிவித்து, மலர்கள், அரும்கம்புல் சாத்தப்பட்டன. பின்னர் , சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. உற்சவ மூர்த்தியை கோயிலினுள் உலா வந்தார்.
முன்னதாக சிவன், விசாலாட்சிக்கு அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் தம்மம்பட்டி, மெட்டாலா, நாரைக்கிணறு, நாகியம்பட்டி, உலிபுரம் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர். இதேபோல் செந்தாரப்பட்டி ,கெங்கவல்லி, வீரகனூர் பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா நடைபெற்றது.
சங்ககிரி சோமேஸ்வரர் கோயிலில்
பிரதோஷ வழிபாடு
சங்ககிரி, மார்ச் 3: சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் சுவாமிக்கு காலையில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் மாலையில் உற்சவ மூர்த்தி சுவாமிகளுக்கு பால், இளநீர், மஞ்சள், சந்தனம், திருநீறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்