சுதந்திரத்துக்குப் பிறகு சிறுவாச்சூர் மலைக் கிராமத்துக்கு மின் இணைப்பு

சிறுவாச்சூர் ஊராட்சி மலைக் கிராமத்துக்கு ரூ. 33 லட்சம் செலவில் மின் இணைப்பு சனிக்கிழமை வழங்கப்பட்டது.

சிறுவாச்சூர் ஊராட்சி மலைக் கிராமத்துக்கு ரூ. 33 லட்சம் செலவில் மின் இணைப்பு சனிக்கிழமை வழங்கப்பட்டது.
நாடு சுதந்திரம் அடைந்த இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்பகுதி மக்களுக்கு மின் வெளிச்சம் கிடைத்துள்ளது.
சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள சிறுவாச்சூர் ஊராட்சியை அடுத்து சேட்டூர் மலைக் கிராமம் உள்ளது. இந்தக் கிராமம் சிறுவாச்சூரிலிருந்து சுமார் 4.75 கிலோ மீட்டர் தொலைவு உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட  மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இதுநாள் வரை இப் பகுதி மக்கள் மின் விநியோகம் கிடையாது. பொதுமக்களும் அலுவலர்களுக்குக் கோரிக்கை விடுத்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் ஆணைப்படி சேலம் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ஆர். இளங்கோவன் தலைமையில் இப்பகுதிக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி எம்பி.,  க. காமராஜ், கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் அ. மருதமுத்து, தலைவாசல் ஒன்றியச் செயலாளர் க. ராமசாமி, மாவட்ட மின் அதிகாரி மணிவண்ணன், ஆத்தூர் மின்வாரியச் செயற்பொறியாளர் அர்ச்சுனன், உதவி செயற்பொறியாளர் கோமதி செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் 25 வீடுகளுக்கு மின் இணைப்பும், ஒரு டிரான்ஸ்பார்மர், 4.75 கிலோ மீட்டர் தொலைவுக்கு 114 மின் கம்பங்களும் துவக்கி வைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com