சுடச்சுட

  

  சேலத்தில் காவல் துறையினருக்கான நிறை வாழ்வு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
  சேலம் மாநகர காவல் துறையினருக்கான நிறை வாழ்வு பயிற்சியின் 18ஆவது  குழுவுக்கான பயிற்சி முகாம் லைன் மேட்டில் உள்ள காவலர் சமுதாயக் கூடத்தில் தொடங்கியது.  முகாமை சேலம் மாநகர காவல் ஆணையர் கே.சங்கர் தொடக்கி வைத்தார். மேலும் இப்பயிற்சி முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் நடத்தப்படுகிறது. பெங்களூரு நிம்ஹான்ஸில் பயிற்சி பெற்றவர்கள் மனநலம் சார்ந்த பயிற்சியை வழங்குகின்றனர்.  
  முகாமில் காவல் ஆணையர் கே.சங்கர் பேசியது: காவலர்கள் மன அழுத்தமின்றி, எவ்வித எதிர்பார்ப்புமின்றி பணியாற்றிட வேண்டும். மேலும், தேவை ஏற்பட்டால் என்னை நேரில் அணுகி குறைகளைக் கூறி ஆலோசனை பெறலாம். மேலும், ஒவ்வொருவரும் விட்டுக் கொடுத்து வேலை செய்தால் மன அழுத்தம் ஏற்படாது என்றார்.  
  முகாமில் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையர் பி.தங்கதுரை மற்றும் 40 காவல் துறையினர்கள் கலந்து
  கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai