தேர்தல் பாதுகாப்புக்கு துணை ராணுவ படையினர் 80 பேர் சேலம் வருகை

சேலம் மக்களவைத் தொகுதியில் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக சுமார் 80 பேர் கொண்ட மத்திய தொழிலக 

சேலம் மக்களவைத் தொகுதியில் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக சுமார் 80 பேர் கொண்ட மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் (சி.எஸ்.ஐ.எஃப்.) வெள்ளிக்கிழமை சேலம் வந்தனர்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு ஏப்.18-இல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனிடையே, வேட்பு மனு தாக்கல் மார்ச் 19 ஆம் தேதி தொடங்கி, மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தநிலையில் அரசியல் கட்சியினர் வேட்பு மனுத் தாக்கல் பாதுகாப்புப் பணிக்காக கேரள மாநிலத்தில் உள்ள மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் (சி.எஸ்.ஐ.எஃப்.) ரயில் மூலம் வெள்ளிக்கிழமை மாலை சேலம் வருகை தந்தனர்.
இதில் டி.எஸ்.பி. தலைமையில் 2 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 80 பேர் கொண்ட மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணிக்கு வருகை தந்துள்ளனர். தற்போது சேலம் உருக்காலையில் உள்ள மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் முகாமில் தங்கியுள்ளனர். இவர்கள் நிலை கண்காணிப்புக் குழுக்களுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது.
இதைத்தொடர்ந்து மார்ச் 30 ஆம் தேதிக்குப் பிறகு கூடுதலாக துணை ராணுவப் படையினர் சேலத்துக்கு வருவார்கள் என காவல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com