பட்டறையில் தீ விபத்து: 2 லாரிகள் தீக்கிரை

சேலத்தில் லாரி பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 லாரிகள் தீக்கிரையாகின.

சேலத்தில் லாரி பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 லாரிகள் தீக்கிரையாகின.
சேலம் கிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜுடன் சேர்ந்து அரசமரத்துக்காடு பகுதியில் லாரி பட்டறை நடத்தி வருகிறார். இந்தநிலையில் வியாழக்கிழமை இரவு லாரி பட்டறையைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றார். இதனிடையே, வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் லாரி பட்டறையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதுதொடர்பாக அருகில் உள்ளவர்கள் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.உடனே தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ விபத்தில் பட்டறையில் இருந்த 2 லாரிகள், டயர்கள் உள்ளிட்ட உபகரணங்கள் தீக்கிரையாகின. சேத மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தீயணைப்புத் துறையினர் 5 வாகனங்களில் வந்து சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.இதுதொடர்பாக, அன்னதானப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com