சுடச்சுட

  


  ஆத்தூர் தேசிய புறவழிச்சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்க லாரி பாலத்தின் கைப்பிடி சுவரை உடைத்துக் கொண்டு சென்று ஆற்றில் கவிழ்ந்துவிபத்துக்குள்ளானது.
  கேரள மாநிலம், கொச்சியிலிருந்து  தின்னர் ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை சென்னை திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த கணபதி மகன் உமாபதி (35)என்பவர் ஓட்டி சென்றார்.   ஆத்தூர்தேசிய புறவழிச்சாலையில் லாரி சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து  வசிஷ்டநதி  பாலத்தின் கைப்பிடி சுவரை உடைத்துக் கொண்டு  ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த  ஓட்டுநர் உமாபதி ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.டேங்கர் லாரியில் இருந்த தின்னர் கீழே கொட்டி வீணாகியது. மேலும் லாரி சேதமடைந்தது. தகவலறிந்து வந்த ஆத்தூர் தீயணைப்புத்துறையினர் லாரியை மீட்டனர்.
  விபத்து  குறித்து  ஆத்தூர் ஊரக காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai