சுடச்சுட

  


  சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சொத்துத் தகராறில் தாயைக் கொலை செய்ததோடு, துôக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய மகனை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
  வாழப்பாடியை அடுத்த திருமனுôர் அண்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த செங்கோடக் கவுண்டர் மனைவி பாப்பு (72).  இவருக்கு மல்லிகா (52) என்ற மகளும், வெங்கடாசலம் (50) என்ற மகனும் உள்ளனர். மல்லிகா குடும்பத்தோடு சேலம் தாதகாப்பட்டியில் வசித்து வருகிறார். 
   வெங்கடாசலத்துக்கு கவிதா என்ற மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். இவரது வீட்டின் அருகில் அவரது தாயார் பாப்பு தனியாக வசித்து வந்தார்.  இந்நிலையில், கடந்த 11-ஆம் தேதி மின் இணைப்புகளை தனது பெயருக்கு மாற்றம் செய்வதற்காக சகோதரி மல்லிகாவிடம் கையொப்பம் பெற்றுக் கொடுக்குமாறு, தாய் பாப்புவிடம் வெங்கடாசலம் கேட்டுள்ளார். 
  இதையடுத்து மல்லிகாவிடம் கையொப்பம் பெற்றுக் கொடுக்காததால் ஆத்திரமடைந்த வெங்கடாசலம், தாய் பாப்புவை தாக்கியுள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 13-ஆம் தேதி காலை, தனது தாய் பாப்பு வீட்டில் துôக்கிட்டுத் தற்கொலை  செய்து கொண்டதாக வாழப்பாடி போலீஸாருக்கு வெங்கடசலம் தகவல் தெரிவித்துள்ளார்.
  இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த  காவல் ஆய்வாளர் சுப்பிரமணி, உதவி ஆய்வாளர் கலைச்செல்வன் ஆகியோர், மூதாட்டியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு  சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனது தாயின் சாவில் மர்மம் இருப்பதாக மகள் மல்லிகா வாழப்பாடி போலீஸில் புகார் செய்தார். இதில் சொத்துத் தகராறில் ஆத்திரமடைந்த வெங்கடாசலம், தனது தாய் பாப்புவை தாக்கி கழுத்தை நெரித்துக் கொலை செய்ததும், இதனை மறைப்பதற்காக தற்கொலை செய்து கொண்டதாக நடகமாடியதும் தெரியவந்தது. இதனையடுத்து, வெங்கடாசலத்தை போலீஸார் கைது செய்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai