சுடச்சுட

  


  பச்சைமலை, செந்தாரப்பட்டி உள்ளிட்ட 6 ஊர்களில் 420 பேர் பங்கேற்ற பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி இருநாள்கள் நடைபெற்றன.
  கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என்று 70 பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் செயல்படும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் 420 பேருக்கு தம்மம்பட்டி, பச்சைமலையில் பெரியபக்களம், கூடமலை, செந்தாரப்பட்டி, கெங்கவல்லி, ஆணையாம்பட்டி ஆகிய ஆறு ஊர்களில் பயிற்சி முகாம், மார்ச் 14, 15 -ஆம் தேதிகளில் நடைபெற்றன. இதில் பங்கேற்றவர்களுக்கு கருத்தாளர்கள் அர்ஜுனன், சுபாஷினி, தமிழ்மாறன், நிர்மலாசெல்வி, ரோசலின் ராணி, சுப்ரமணி ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சி முகாம்களை வட்டார க்கல்வி அலுவலர்கள், மேற்பார்வையாளர் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai