சுடச்சுட

    

    வாழப்பாடி பகுதியில் பூத்துக்குலுங்கும் வசந்தராணி பூக்கள்!

    By DIN  |   Published on : 17th March 2019 05:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    வாழப்பாடி பகுதியில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும்  வசந்தராணி மரங்களில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. 
    வாழப்பாடி பகுதியில் மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி பகுதியில் இருந்து அயோத்தியாப்பட்டணம் வரையிலான ஏறக்குறைய 10 கி.மீ. தூரத்திற்கு  சேலம் -சென்னை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வசந்தராணி மரங்கள் நடப்பட்டன. தொடர்ந்து பராமரிக்கப்பட்டதால் நல்ல முறையில் வளர்ந்துள்ள இந்த மரங்களில் தற்போது  இலைகள் உதிர்ந்து,  இளஞ்சிவப்பு நிற பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. கண்களுக்கு ரம்மியாக விருந்தளிக்கும் மருத்துவக் குணம் கொண்ட வசந்தராணி மரப்பூக்களை பயணிகளும் பொதுமக்களும் கண்டு ரசித்து செல்கின்றனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai