கொங்கணாபுரத்தில் ரூ.1 கோடிக்கு பருத்தி, எள் விற்பனை

கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில், 4 ஆயிரம் பருத்தி மூட்டைகள், எள் ரகங்கள் ரூ. 1 கோடிக்கு விற்பனையாகின.


கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில், 4 ஆயிரம் பருத்தி மூட்டைகள், எள் ரகங்கள் ரூ. 1 கோடிக்கு விற்பனையாகின.
சேலம் மாவட்டம்,  கொங்கணாபுரத்தில் உள்ள வேளாண்மை கூட்டுறவு விற்பனை மையத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பருத்தியை இம்மையத்தில் நடைபெறும் பொது ஏலத்தில்  விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல் இவ்விற்பனை மையத்தில் நடைபெறும் பொது ஏலத்தில் திருப்பூர், கோவை, ஈரோடு மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து  வியாபாரிகள் கலந்துகொண்டு, அதிக அளவில் பருத்தியை மொத்தக்கொள்முதல் செய்கின்றனர்.  இந்த நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் சுமார் 4000 மூட்டை பருத்திகள் 600 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது. இதில் டி.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ரூ.5,700 முதல் ரூ.7,199 வரை விலைபோனது. அதேபோல் பி.டி. ரக முதல் தர பருத்தி குவிண்டால் ரூ.5,400 முதல் ரூ.5,912  வரை விற்பனையானது. பி.டி.ரக இரண்டாம் தர பருத்தி குவிண்டால் ரூ.4,800 முதல் ரூ.5,300  வரை விலைபோனது. கடந்த வாரத்தைவிட
பி.டி. ரக பருத்தியின் விலை சற்று உயர்ந்தும், டி.சி.எச். ரக பருத்தியின் விலை சற்றுக்குறைந்தும் விற்பனையானதாக, ஏலத்தில் பங்குகொண்ட விவசாயிகள் கூறினர்.
நாள்முழுதும் நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ. 1 கோடிக்கு பருத்தி மற்றும் எள் விற்பனையாகின. குறைவான அளவே எள் வரத்து இருந்த நிலையில் நடுத்தர ரக எள் கிலோ ரூ.110 முதல் ரூ.120வரை விற்பனையானது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com