வாழப்பாடி பகுதியில் பூத்துக்குலுங்கும் வசந்தராணி பூக்கள்!

வாழப்பாடி பகுதியில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும்  வசந்தராணி மரங்களில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. 


வாழப்பாடி பகுதியில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும்  வசந்தராணி மரங்களில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. 
வாழப்பாடி பகுதியில் மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி பகுதியில் இருந்து அயோத்தியாப்பட்டணம் வரையிலான ஏறக்குறைய 10 கி.மீ. தூரத்திற்கு  சேலம் -சென்னை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வசந்தராணி மரங்கள் நடப்பட்டன. தொடர்ந்து பராமரிக்கப்பட்டதால் நல்ல முறையில் வளர்ந்துள்ள இந்த மரங்களில் தற்போது  இலைகள் உதிர்ந்து,  இளஞ்சிவப்பு நிற பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. கண்களுக்கு ரம்மியாக விருந்தளிக்கும் மருத்துவக் குணம் கொண்ட வசந்தராணி மரப்பூக்களை பயணிகளும் பொதுமக்களும் கண்டு ரசித்து செல்கின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com