விவசாயிகள் விவகாரத்தில் திமுக கபட நாடகமாடுகிறது:யுவராஜா

விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், உயர் மின் அழுத்த கோபுரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு கையெழுத்து


விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், உயர் மின் அழுத்த கோபுரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு கையெழுத்து போட்ட திமுக தற்போது அந்தத் திட்டங்களுக்கு எதிராகப் போராடி கபட நாடகமாடுகிறது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலுக்காக சேலத்தில் உள்ள கூட்டணி கட்சியின் நிர்வாகிகளை சந்திக்க தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா சனிக்கிழமை சேலம் வந்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
சேலம், சென்னை, கோவை போன்ற மாவட்டங்களில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் சேலம் மாவட்டம் முன்மாதிரி நகரமாக உள்ளது. அதேபோல மருத்துவமனை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை சிறப்பாக அரசு செய்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் அதிமுக அணி மிகப்பெரிய வெற்றி பெறும். அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளும் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவர். 
மீத்தேன்,ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு திமுக ஆட்சியில்தான் கையெழுத்திடப்பட்டன.
தஞ்சை மாவட்டம், பாதிப்புக்கு முழு பொறுப்பு திமுகதான். தற்போது விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக பொய்யான அறிக்கைகளைக் கூறி வருகிறது. சேலத்தில் மெட்ரோ ரயில் கொண்டு வரப்படும் என கூறுவது முழுக்க முழுக்க மக்களை ஏமாற்றும் திட்டமாகும்.
கெயில் மற்றும் உயர் மின் அழுத்த கோபுரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் திமுக ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டன. 
தற்போது மீத்தேன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழகத்துக்குக் கொண்டு வருவதைத் தடுப்போம் எனக் கூறி வரும் திமுக சுய நலத்துக்காக தவறான கருத்துகளைப் பரப்பி வருகிறது.
அதிமுக கூட்டணி கட்சியில் இணைந்துள்ள பல்வேறு கட்சிகளை விமர்சனம் செய்யும் திமுக தற்போது மதிமுகவை கூட்டணியில் வைத்துள்ளது. மக்களின் அத்தியாவசியமான கேபிள் இணைப்புக் கட்டணம் அதிகமாக உள்ளது. கேபிள் கட்டணத்தை வரைமுறைப்படுத்த வேண்டும். வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருக்கும் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கேபிள் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் நிர்வாகிகள் சுசீந்திரகுமார், மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் ரகு நந்தகுமார், நிர்வாகிகள் சக்தி, லட்சுமிகாந்தன், கார்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com