Enable Javscript for better performance
ஆரம்ப சுகாதார நிலையத்தில் விழிப்புணர்வு பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளர்கள் நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி, சங்ககிரி அருகே உள்ள வடுகப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சங்ககிரி தேர்தல் பிரிவின் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     சங்ககிரி வட்டாட்சியர் கே.அருள்குமார் தலைமை வகித்து, தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தி பேசினார். தனி வட்டாட்சியர் ஆர்.கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார்.
     அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அமுதாராணி, மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் தேர்தலில் தவறாமல் வாக்களிப்பது குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனையடுத்து செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று ஆரம்ப சுகாதார நிலையத்தை அடைந்தனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai