Enable Javscript for better performance
ஏப். 3-இல் அஞ்சல் துறை குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அஞ்சல் துறை சார்பில் வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளதாக சேலம் கிழக்கு மண்டல அஞ்சல் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     இதுகுறித்து சேலம் கிழக்கு மண்டல அஞ்சல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மண்டல அளவில் நடத்தப்படும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி காலை 11 மணியளவில் நடைபெறுகிறது. இக்கூட்டம் அஞ்சல் துறைத் தலைவர் மேற்கு மண்டல அலுவலகம், கோவை ஆர்.எஸ்.புரம் தலைமை அஞ்சலகக் கட்டடம், 2-ஆவது தளத்தில் நடைபெறுகிறது.
     எனவே, பொதுமக்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்துகொண்டு அஞ்சல் சம்பந்தமான குறைகளை நேரிலோ அல்லது அஞ்சல் துறைத் தலைவர் மேற்கு மண்டல அலுவலகம், கோவை ஆர்.எஸ்.புரம் தலைமை அஞ்சலகம் 641002 என்ற முகவரிக்கு தபால் மூலமோ அனுப்பி வைக்கலாம். அஞ்சல் உறையின் மேல் "தாக் அதாலத் கேஸ்' என்று எழுதி வரும் மார்ச் 28-ஆம் தேதிக்கு முன்னதாக அனுப்பி வைக்க வேண்டும்.
     மணியார்டர், விபிபி, விபிஎல், பதிவு தபால், விரைவு தபால், காப்பீடு தபால் பற்றிய புகார்களுக்கு முழு முகவரியோடு பதிவு அஞ்சல் எண், அலுவலகத்தின் பெயர் உள்ளிட்ட அனைத்தும் இடம் பெற்றிருக்க வேண்டும். சேமிப்பு வங்கி அல்லது அஞ்சல் காப்பீடு பற்றிய புகார்களுக்கு கணக்கு எண், பாலிசி எண், வைப்புத்தொகையாளரின் பெயர், வசூலிக்கப்பட்ட விவரங்கள் உள்ளிட்ட அனைத்தும் இடம்பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai