Enable Javscript for better performance
ஏற்காடு படகு ஏரியில் கழிவு நீர் கலப்பது தடுக்கப்படுமா?- Dinamani

சுடச்சுட

    

    ஏற்காடு படகு ஏரியில் கழிவு நீர் கலப்பது தடுக்கப்படுமா?

    By DIN  |   Published on : 27th March 2019 09:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஏற்காடு படகு ஏரியில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
     சேலம் மாவட்டம், ஏற்காடு சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதி, கழிவறை, குடிநீர், பொது சுகாதாரம் கூட கிடைக்காத நிலையில் உள்ளது. மேலும், பல ஆண்டுகாலமாக ஏற்காடு நகர் பகுதி கழிவு நீர் முழுவதும் ஏரியில் கலப்பதால் படகு ஏரியின் நீர் மாசடைந்து ஏரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளும் குறுகி வருகின்றன. மேலும், ஏற்காடு சுற்றுலாப் பயணிகளின் பொழுது போக்கான படகு சவாரியும் பாதிக்கப்படுகிறது.
     மேலும், உணவகம், பொது தகவல் மையம், தகவல் பலகை, வழித்தடங்கள் போன்ற சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை தகவல்களை ஏற்படுத்தி தரவேண்டும் என சுற்றுலாப் பயணிகள் மாவட்ட நிர்வாகத்துக்கும், சுற்றுலாத் துறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai