Enable Javscript for better performance
கடம்பூர் அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டுவிழா- Dinamani

சுடச்சுட

    

    கெங்கவல்லி ஒன்றியம், கடம்பூர் அரசுத் தொடக்கப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா மற்றும் 2019-2020 ஆம் கல்வியாண்டு விழா மாணவர் சேர்க்கை முனைப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
     விழாவுக்கு கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாசுகி மற்றும் அந்தோணிமுத்து தலைமை வகித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர் செல்வம் வரவேற்றார்.
     ஆசிரியை ஜெயமணி ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி குழந்தைகளுக்கு மீனாம்பிகா பரிசுகள் வழங்கினார். வரும் கல்வியாண்டில் பள்ளி வயதுக் குழந்தைகளை கடம்பூர் அரசு தொடக்கப் பள்ளியில் சேர்க்க வலியுறுத்தப்பட்டது. மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆசிரியை தமிழ்ச்செல்வி நன்றி கூறினார். பெற்றோர் திரளாகப் பங்கேற்றனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai