Enable Javscript for better performance
சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட 37 பேர் வேட்புமனு தாக்கல்- Dinamani

சுடச்சுட

    

    சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட 37 பேர் வேட்புமனு தாக்கல்

    By DIN  |   Published on : 27th March 2019 09:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட மொத்தம் 37 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
     தமிழகம், புதுவையில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கியது. மார்ச் 26-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது.
     அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.கே.செல்வம் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
     அவரின் சொத்து மதிப்பு விவரம்: அமமுக வேட்பாளர் எஸ்.கே.செல்வம் அசையும், அசையா சொத்து ரூ.60.65 லட்சம் இருப்பதாக உறுதிமொழிப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார். அவரது மனைவி ராதா (எ) மணி பெயரில் அசையும் சொத்து, அசையா சொத்து ரூ.36.83 லட்சம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
     இதில், சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட மொத்தம் 37 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதிமுக சார்பில் கே.ஆர்.எஸ்.சரவணன், திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் உள்பட 6 பேர் அரசியல் கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
     அமமுக வேட்பாளர் எஸ்.கே.செல்வம் உள்ளிட்ட 31 பேர் சுயேச்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai