Enable Javscript for better performance
சேலம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சேலம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

    By DIN  |   Published on : 27th March 2019 09:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலம் மக்களவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை எடப்பாடியில் நடைபெற்றது.
     நகர செயலர் சி.ராமன் வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அதிமுக அமைப்புச் செயலர் பொன்னையன் சேலம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனை தொண்டர்களிடையே அறிமுகப்படுத்தி பேசினார்.
     முன்னதாக பேசிய பா.ம.க. மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, தேர்தல் நேரத்தில் கூட்டணி கட்சியினர் ஒன்றிணைந்து வாக்கு சேகரிக்கும் விதம் குறித்தும், வாக்குப் பதிவு நாளில் மேற்கொள்ள வேண்டிய கண்காணிப்பு பணிகள் குறித்தும் நிர்வாகிகளுக்கு விளக்கி கூறினார்.
     நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் வெங்கடாசலம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கார்த்தி, கண்ணையன், பா.ம.க. மாவட்டச் செயலர் வழக்குரைஞர் ந.அண்ணாதுரை, த.மா.கா. மாவட்ட நிர்வாகி கருப்பூர் சுசீந்தரகுமார் மற்றும் பாஜக, தேமுதிக, புரட்சி பாரதம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai