Enable Javscript for better performance
தேர்தலை புறக்கணிப்பதாக வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தேர்தலை புறக்கணிப்பதாக வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டம்

    By DIN  |   Published on : 27th March 2019 09:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலத்தில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, வீடுகளில் கருப்புக் கொடி கட்டி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
     சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலம் 9-ஆவது வார்டு வடக்கு சத்தியா நகர் கல்லுப்பட்டறை தெருவில் 30 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு கடந்த 30 ஆண்டுகளாக சாலை, கழிவு நீர் கால்வாய் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி ஏற்படுத்தப்படவில்லை என தெரிகிறது.
     இது தொடர்பாக, அப்பகுதி மக்கள் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணிப்போம் என்ற பதாகை வைத்து, வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 30 ஆண்டுகளாக இப்பகுதியில் கழிவு நீர் கால்வாய், சாலை வசதி அமைத்துத் தரவில்லை. இதனால் மழைக் காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக இருப்பதால் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகிறோம். கழிவு நீர் கால்வாய் வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஆங்காங்கே குட்டை போல் தேங்கி இருப்பதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, சாலை, கழிவு நீர் கால்வாய் வசதி செய்து தரும் வரை அனைத்து தேர்தலையும் புறக்கணிக்க உள்ளோம் என்றனர்.
     தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீஸார் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என உறுதி அளித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai