Enable Javscript for better performance
தேர்தல் பொதுப் பார்வையாளர் சேலம் வருகை- Dinamani

சுடச்சுட

    

    சேலம் மக்களவைத் தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் ராஜேஷ் மஞ்சு திங்கள்கிழமை சேலம் வந்தார்.
     மக்களவைத் தேர்தலில் சேலம் மக்களவைத் தொகுதியைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள ராஜேஷ் மஞ்சு திங்கள்கிழமை சேலம் வருகை தந்தார்.
     மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ரோகிணி ராம்தாஸ் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
     மத்திய குஜராத் விஜ் கம்பெனி லிட் மேலாண் இயக்குநராக பணியாற்றி வரும் ராஜேஷ் மஞ்சுவுக்கு, சேலம் இரும்பாலை சுற்றுலா மாளிகை வைகை இல்லத்தில் முகாம் அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள ராஜேஷ் மஞ்சுவின் செல்லிடப்பேசி எண்-63804 39582 மற்றும் தொலைபேசி எண்-0427 2383665 ஆகும்.
     சேலம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட தேர்தல் தொடர்பான புகார்களை மேற்குறிப்பிட்டுள்ள செல்லிடப்பேசி மற்றும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். சந்திப்பின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.திவாகர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தீபா கனிகர் ஆகியோர் உடனிருந்தனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai