Enable Javscript for better performance
பஞ்சு வாங்க கொண்டு சென்ற ரூ.1.39 லட்சம் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    கெங்கவல்லி அருகே வீரகனூரில் திங்கள்கிழமை நள்ளிரவு பஞ்சு வாங்க கொண்டு சென்ற ரூ.1.39 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
     கெங்கவல்லி அருகே வீரகனூரில் திங்கள்கிழமை நள்ளிரவு கூடுதல் பறக்கும் படையினர் அலுவலர் வசந்தன் தலைமையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மகுடஞ்சாவடியிலிருந்து நெற்குணத்துக்கு பஞ்சு வாங்க மினி லாரியில் செந்தில் என்பவர் சென்ற போது, அவரை மறித்து சோதனை செய்ததில் அவர் வைத்திருந்த ரூ.1,39,600 பறிமுதல் செய்யப்பட்டது.
     ஆவணங்கள் ஏதும் இல்லாததால், அந்த தொகையை பறக்கும்படையினர் கெங்கவல்லி வட்டாட்சியர் சுந்தரராஜனிடம் ஒப்படைத்தனர். பின்னர் அத்தொகை செவ்வாய்க்கிழமை கெங்கவல்லியிலுள்ள அரசு துணை கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai