Enable Javscript for better performance
பெண்களிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்ட 4 பேர் கைது: 40 பவுன் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    பெண்களிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்ட 4 பேர் கைது: 40 பவுன் பறிமுதல்

    By DIN  |   Published on : 27th March 2019 09:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலம் பட்டர்பிளை மேம்பாலப் பகுதியில் செல்லும் பெண்களை மறித்து, வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து 40 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.
     ஈரோடு மாவட்டம், பவானி பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரா. சேலம் அஸ்தம்பட்டி வந்திருந்த பவித்ரா, தனது உறவினர் மோகன சுந்தரத்துடன் கடந்த மார்ச் 22-ஆம் தேதி இரவு பவானிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் பட்டர்பிளை மேம்பாலம் அருகே இரவு 10 பேர் கொண்ட கும்பல் திடீரென வழிமறித்து, பவித்ராவிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்டனர்.
     இதுகுறித்து பவித்ரா கொண்டலாம்பட்டி போலீஸில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கொண்டலாம்பட்டி புத்தூரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மணிகண்டன் அவரது கூட்டாளிகள் பெரிய புதூரைச் சேர்ந்த சுபாஷ், இளங்கோ, தினேஷ் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
     இதையடுத்து நான்கு பேரையும் போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 40 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். விசாரணையில், கடந்த மூன்று ஆண்டுகளாக மேம்பாலம் வழியாகச் செல்லும் பெண்களை மிரட்டி இவர்கள் நகைப் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனிடையே கும்பலைச் சேர்ந்த மேலும் பலரை போலீஸார் தேடி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai