Enable Javscript for better performance
பெண்ணை அடித்துக் கொலை செய்த கல் மாவு மில் உரிமையாளர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பெண்ணை அடித்துக் கொலை செய்த கல் மாவு மில் உரிமையாளர் கைது

    By DIN  |   Published on : 27th March 2019 09:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலம் அன்னதானப்பட்டியில் பெண்ணை அடித்துக் கொலை செய்த கல் மாவு மில் உரிமையாளரை போலீஸார் கைது செய்தனர்.
     சேலம் அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்த ரவி (58), அன்னதானப்பட்டி கே.பி. கரடு பகுதியில் பல்வேறு பொருள்கள் தயாரிக்க பயன்படும் கல் மாவு மில் நடத்தி வருகிறார். இவரது மில்லில் பெரியபுதூர் பகுதியைச் சேர்ந்த பாப்பாத்தி என்பவர் கடந்த நான்கு ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். இவரது கணவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர்.
     இந்த நிலையில், மில்லில் வேலை செய்து வந்த பாப்பாத்திக்கும், மில் உரிமையாளர் ரவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக பாப்பாத்தி வீட்டுக்கு வரவில்லையாம். இதனால் சந்தேகமடைந்த அவரது மகன்கள், உறவினர்களிடம் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் மில்லுக்கு வந்து உரிமையாளர் ரவியிடம் விசாரித்தனர். அதற்கு அவர் பாப்பாத்தி வேலைக்கு வரவில்லை என கூறினாராம்.
     இந்த நிலையில் மில்லில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து, அப்பகுதி மக்கள் அன்னதானப்பட்டி போலீஸில் புகார் செய்தனர். இதையடுத்து திங்கள்கிழமை இரவு போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
     அப்போது, மில்லில் உள்ள ஒரு அறையில் பாப்பாத்தி அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, பாப்பாத்தியின் உடலை போலீஸார் கைப்பற்றினர்.
     அப்போது அங்குள்ள ஒரு அறையில் மதுபோதையில் கிடந்த ரவியிடம் போலீஸார் விசாரித்தனர். அதில், நடத்தையில் சந்தேகப்பட்டு பாப்பாத்தியிடம் வாக்குவாதம் செய்ததாகவும், அப்போது ஏற்பட்ட தகராறில் அவரை அடித்துக் கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து கல் மாவு மில் உரிமையாளர் ரவியை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai