Enable Javscript for better performance
மாடு விற்ற பணம் ரூ.1,17,800 பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    கெங்கவல்லி அருகே கூடமலையில் மாடு விற்ற பணத்தை கொண்டு சென்ற போது, அத்தொகையை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
     கெங்கவல்லி அருகே கூடமலையில் தேர்தல் பறக்கும் படையினர் அலுவலர் செல்வராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இரண்டு மாடுகளை விற்றுவிட்டு, ரூ.1,17,800 கொண்டு வந்த கூடமலையைச் சேர்ந்த காத்தான் மகன் சேகரை பரிசோதனை செய்த பறக்கும் படையினர், அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால், அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தொகை கெங்கவல்லி வட்டாட்சியர் சுந்தரராஜனிடம் ஒப்படைக்கப்பட்டு, கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai