Enable Javscript for better performance
வாகனச் சோதனை: சங்ககிரியில் ரூ.1.90 லட்சம் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த ஈரோடு பிரிவு சாலை அருகே தேர்தல் நிலை கண்காணிப்புக் குழு எண் 1 சார்பில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மேற்கொண்ட வாகனச் சோதனையில், வியாபாரியிடமிருந்து ரூ.1லட்சத்து 90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
     நாமக்கள் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட சங்ககிரியில், மகுடஞ்சாவடி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) மலர்விழி தலைமையிலான தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர் சங்ககிரியை அடுத்த ஈரோடு பிரிவு சாலை அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
     அப்போது, குமாரபாளையத்தில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்ததில், உரிய ஆவணமின்றி ரூ.1.90 லட்சம் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர் குமாரபாளையம் பவர்ஹவுஸ் எதிர்வீதி பகுதியைச் சேர்ந்த வியாபாரி குமாரசாமி மகன் மகேஷ்குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் ரொக்கத்துக்கான உரிய ஆவணம் இல்லாததால், பறிமுதல் செய்யப்பட்ட பணம் நாமக்கல் மக்களவைத் தொகுதி உதவி தேர்தல் அலுவலரும், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியருமான மு.அமிர்தலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai