Enable Javscript for better performance
ஆத்தூரில் ரூ.1.24 கோடி மதிப்பிலான தங்கம்-வெள்ளி பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    ஆத்தூரில் ரூ.1.24 கோடி மதிப்பிலான தங்கம்-வெள்ளி பறிமுதல்

    By DIN  |   Published on : 28th March 2019 09:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆத்தூரில் பறக்கும் படையினர் ரூ.1.24 கோடி மதிப்பிலான தங்கம்-வெள்ளிப் பொருள்களை புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
    சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள நரசிங்கபுரம் கூட்டுச் சாலை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது, சேலம் நோக்கிச் சென்ற வேனை மறித்து சோதனை செய்ததில்,  3 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளிப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.  இதையடுத்து, ஆத்தூர் கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான அபுல்காசிமிடம் தகவல் தெரிவித்தனர்.
     இதைத் தொடர்ந்து,  அங்கு விரைந்து வந்த கோட்டாட்சியர் மேற்கொண்ட விசாரணையில்,  நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் இருந்து தனியார் நிறுவனம் மூலமாக வேனில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை சேலத்தில் உள்ள நகைக் கடைகளுக்குக் கொடுப்பதற்காக கொண்டு செல்வதாகவும்,  ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.  இவற்றின் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 24 லட்சத்து 54 ஆயிரத்து 648 ஆகும்.
    இதையடுத்து,  தேர்தல் அலுவலர் அபுல்காசிம் பார்வையிட்டு ஆய்வு செய்ததில்,  தேர்தல் விதிமுறைகளின்படி நிர்ணயிக்கப்பட்ட மதிப்பை விட அதிகமாக இருந்ததால்,  தங்கம்-வெள்ளி ஆகியவற்றை சேலம் மாவட்ட வருமான வரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai