Enable Javscript for better performance
எலுமிச்சை பழங்கள் விலை உயர்வு- Dinamani

சுடச்சுட

    

    தம்மம்பட்டியில் எலுமிச்சை பழங்களின் விலை கிடுகிடுவென்று உயர்ந்தது.
    தம்மம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது எலுமிச்சை பழங்களின் விளைச்சல் குறைந்து விட்டதால் மண்டிகளுக்கும், காய்கறிக் கடைகளுக்கும் அதன் வரத்துக் குறைந்துள்ளது.
    தற்போது கோடை காலம் துவங்கிவிட்டதால், எலுமிச்சை பழங்களின் தேவை, சற்றே அதிகரித்த வண்ணம் உள்ளது.
    இதனால் மண்டிகளுக்கு வரும் குறைந்த அளவு எலுமிச்சை பழங்கள் ஒன்று ரூ. 4.50 காசுக்கு விற்பனையாகிறது.
    அவை சில்லரை விற்பனைக்காகக் கடைகளில்  ரூ. 5-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் வரை எலுமிச்சை பழங்களின் விலை ரூ. 3 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai