Enable Javscript for better performance
ஏற்காடு மலைப் பாதையில் விபத்து: காவல் உதவி ஆய்வாளர் பலி- Dinamani

சுடச்சுட

    

    ஏற்காடு மலைப் பாதையில் விபத்து: காவல் உதவி ஆய்வாளர் பலி

    By DIN  |   Published on : 28th March 2019 09:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஏற்காடு மலைப் பாதையில் நிகழ்ந்த விபத்தில், ஏற்காடு காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்தார்.
    சேலம் மாவட்டம், ஏற்காடு காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியற்றி வரும் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த சின்னதுரை மகன் மாணிக்கம் (56), சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் குடியிருந்து தினமும் இருசக்கர வாகனத்தில் பணிக்கு வந்து சென்றார்.
    இந்நிலையில், புதன்கிழமை காலை ஏற்காடு மலைப் பாதையில் 20-ஆவது கொண்டை ஊசி வளைவில் சென்ற போது, சேலம் நோக்கி சென்ற அரசுப் பேருந்து அவர் சென்ற வாகனம் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ஏற்காடு காவல் ஆய்வாளர் ஆனந்தன் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai