Enable Javscript for better performance
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

    By DIN  |   Published on : 28th March 2019 09:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி கட்சியின் தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷ் அறிமுகக் கூட்டம் சேலம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலர் ஆர்.இளங்கோவன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
    ஆத்தூர் நகரச் செயலர் அ.மோகன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலர் ஏ.ஆர்.இளங்கோவன், பாமக மாநில துணை பொதுச் செயலர் பி.என்.குணசேகரன், பாமக மாவட்டச் செயலர் எம்.பி. நடராஜ், பாஜக மாவட்டச் செயலர் சண்முகம், தமாகா மாவட்டச் செயலர் டி.காளிமுத்து, சமத்துவ மக்கள் கட்சி மாவட்டச் செயலர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் கலந்துகொண்டு, வேட்பாளர் எல்.கே.சுதீஷை அறிமுகப்படுத்தி பேசினார்.
    இதில், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்கள் ஆர்.எம்.சின்னதம்பி, அ.மருதமுத்து, கு.சித்ரா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுபாரவி, ஒன்றிய செயலர்கள், நகரச் செயலர், ஆத்தூர், கெங்கவல்லி மற்றும் ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதி மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai